Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Hutch வாடிக்கையாளர்களுக்கு Hutch SmartShare அறிமுகம்

In வணிகம்
Updated: 08:21 GMT, Nov 23, 2015 | Published: 08:21 GMT, Nov 23, 2015 |
0 Comments
1305
This post was written by : Elakkiya
Hutch-Smartshare

இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சியடைந்துவரும் 3G வலையமைப்புக்களுள் ஒன்றான Hutch ‘Hutch SmartShare ‘ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Hutch வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான சாதனங்களுக்கு ஒரு பொதுவான தரவு நிலுவையை பேணுவதற்கு இடமளிக்கும் ஒரு புத்தாக்கமான அறிமுகமாக இது அமைந்துள்ளது.

நீங்கள் உபயோ­கிக்கும் ஒவ்வொரு சாதனமும் தனித்தனியாக தரவு நிலுவையை நிர்வகிக்கும் போது முகங்கொடுக்கின்ற சிரமங்களைப் போக்கி, ஒரு பொதுவான கையடக்க தரவு கணக்கின் மூலமாக அனைத்து சாதனங்களிலும் தரவுப் பாவனையை மேற்கொள்ள இந்த வசதி இடமளிக்கின்றது.

ஒவ்வொரு சாதனத்திலும் தரவு ஒதுக்கீடு காலாவதியாகும் திகதி மற்றும் தரவு அளவு ஆகியவற்றை கண்காணிப்பது சவாலானது. இந்த சாதனங்கள் அனைத்திலும் தரவு ஒதுக்கீட்டு அளவை நிர்வகிக்கும் சிரமங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தீர்வாக Hutch SmartShare அமைந்துள்ளது. Hutch SmartShare  சேவை முற்றிலும் இலவசமானது. வாடகைகளோ அல்லது செயற்படுத்துவதற்கான கட்டணங்களோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg