Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நவக்ரக துயர் போக்கும் சுதர்சனர்

In ஆன்மீகம்
Updated: 05:05 GMT, Nov 24, 2015 | Published: 05:05 GMT, Nov 24, 2015 |
0 Comments
1406
This post was written by :

சக்கர ராஜன், சுதர்சனர், சக்கரத்தாழ்வான், திருவாழியாழ்வான் என்று பல்வேறு நாமங்களில் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராவார். மகா விஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோவில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் காட்சி தருவார்.

அவர், பெருமாளின் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர். சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

நவக்கிரகங்களின் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்க சுதர்சனர் வழிபாடு சிறப்பானதாக கூறப்படுகிறது. ஆற்றல் வாய்ந்த சக்கரத்தாழ்வாருக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று ஏழுமலையான் கோவிலிலும், சக்கரத்தீர்த்தத்திலும் உள்ள சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சக்கரத்தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடப்பது வழக்கம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg