Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்வத்தாமா யார்?

In ஆன்மீகம்
Updated: 08:40 GMT, Nov 25, 2015 | Published: 08:40 GMT, Nov 25, 2015 |
0 Comments
1282
This post was written by : Anojkiyan

அஸ்வத்தாமா என்பவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு ஆசிரியாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வனாவார். துரோணாச்சாரியார் மற்றும் அவருடைய மனைவியான கிரிபிக்கு பிறந்தவர் தான் அஸ்வத்தாமா. அவரின் பிறப்பு முதலே, அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்தது. அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே மூலாதாராமாக அமைந்தது. வில்வித்தை மற்றும் இதர போர் கலைகளில் சிறப்பாக செயலாற்றி ஒரு மிகச்சிறந்த போர் வீரராக அவர் வளர்ந்தார்.

மகாபாரதத்தில் அஸ்வத்தாமா

மகாபாரத போரின் போது, கௌரவர்களின் முகாமில் இருந்து, அவருடைய தந்தையுடன் சேர்ந்து அஸ்வத்தாமா போரில் சண்டையிட்டார். தன் மகனை உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட துரோணாச்சாரியார், தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது திரிஷ்டட்யூம்னரால் அவர் கொல்லப்பட்டார்.

பழி வாங்கிய அஸ்வத்தாமா

இதற்கு பழி வாங்க நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவின் போது, பாண்டவர்களை கொல்வதாக நினைத்து, திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றார். தன் தவறை உணர்ந்த அவர், பாண்டவர்களை கொல்ல, சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். ஆனால் சக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என வியாச முனிவர் அவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்தாமல் திரும்பி வைப்பது என அஸ்வத்தாமாவிற்கு தெரியவில்லை. அதனால் உத்தாராவின் கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல அதை அவர் ஏவினார். இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்தது விடும் எனவும் நினைத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg