Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனுக்கும் விஷணுவுக்கும் உகந்த சோமவார விரதம்

In ஆன்மீகம்
Updated: 06:19 GMT, Nov 30, 2015 | Published: 06:17 GMT, Nov 30, 2015 |
0 Comments
1446
This post was written by :

சோமவாரத்தில் விரதம் இருந்தால் அளவற்ற பயனை பெறமுடியும். விரதங்களுக்குள் சிறந்த விரதம் சோமவார விரதம். பித்ருக்களுக்குத் திருப்தியை அளிக்கக் கூடியது. மாதங்களுக்குள் துலா மாதமும், கார்த்திகை மாதமும் எப்படிச் சிறந்தனவோ அப்படியே கார்த்திகை மாதச் சோமவாரம் மிக்க சிறப்பு வாய்ந்தது.

கார்த்திகை மாதத்தின் முப்பது தினங்களுமே மிகச் சிறந்தவை. விஷ்ணுவின் கோயில்களில் தீபாராதனை செய்வதற்கு உரிய நாட்கள் இவை. இந்த முப்பது தினங்களும் மகா விஷ்ணுவின் கோயிலில் தீபங்களை ஏற்றி வைப்பவர்கள் பித்ருக்கள், வலிய பாவங்களை செய்து நரகத்தில் இருந்த போதிலும் சொர்க்கத்தை அடைவார்கள். இம் மாதத்தில் சோம்வார் அன்று விரதம் இருந்து சிவன் கோயிலில் நெய்யைக் கொண்டு விளக்கு ஏற்றுகிறவன் தன் குலத்தில் இருந்த பித்ருக்களை நரகத்திலிருந்து விடுவிப்பான்.

அவன் முன்னோர் நற்கதியைப் பெறுவர். இந்த தினத்தில் சிவபூஜை செய்கிறவன் மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும். தங்கம் திருடுதல், கள் குடித்தல், பிராமணனைக் கொல்லுதல் முதலிய வலிய பாவங்களை அவன் செய்திருந்த போதிலும் அவை இவனிடத்திலிருந்து விலகிவிடும், தீயில் பட்ட பஞ்சு போலாகிவிடும். இந்த மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரச மரத்தின் நிழலில் அந்த மரத்தின் இலைகளை கொண்டு விஷ்ணுவை அர்ச்சிக்க வேண்டும். அதனால் உயர்ந்த அறிவை பெறுவான்.

விஷ்ணுவின் கோயிலில் ஆயிரம் விளக்குகளை கார்த்திகை மாதத்தில் கிருத்திகை என்னும் நட்சத்திரம் சேரும்போது ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றுகிறவன் பிணியிலிருந்து விடுபடுவான். சகல ஆரோக்யத்துடன் விளங்குவான். அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் திகழ்வான். மகாமகத்தில் மாதத்தில் பிரயாகையில் நூறு வருஷம் ஸ்நானம் செய்பவன் அடையும் பலனை விஷ்ணு கோயிலில் விளக்கு ஏற்றுகிறவன் அடைவான்.

சோமவாரத்தில் சிவலிங்கத்தை ஓர் அந்தணருக்குக் கொடுக்க வேண்டும். அது உயர்ந்த தர்மமாகும். அந்த தர்மத்தின் பயனை வாயாலும் சொல்ல முடியாது. எம்பெருமானுக்குக் கோயில்களில் தீபாராதனம் அர்ச்சகர்கள் செய்கின்றனர். பிறகு தீபம் எரியும்போது தங்கள் விரல்களால் அதை தொட்டு தங்கள் உடலில் தடவி கொண்டால் குஷ்டரோகம் நீங்கிவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg