Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிட்ரோ கேஸ் ஒழுங்கமைத்திருந்த ‘Live Cooking Competition’

In வணிகம்
Updated: 12:16 GMT, Mar 4, 2016 | Published: 12:08 GMT, Mar 4, 2016 |
0 Comments
1177
This post was written by : Anojkiyan

மாபெரும் தேசிய திரவ பெற்றோலிய வாயு இறக்குமதியாளரான லிட்ரோ கேஸ், ‘Live Cooking Competition’ எனும் போட்டியை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அதிகளவு மகிழ்ச்சி, களிப்பு நிறைந்த சமையல் கலை போட்டியில் இலங்கையின் Miss Tourism Sri Lanka International அழகுராணி போட்டியில் பங்குபற்றிய 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை சமையல்கலை நிபுணர்களின் சம்மேளனத்துடன் இணைந்து இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழகுராணிகள் ஐந்து அணிகளில் A, B, C, D மற்றும் E என பிரிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு உணவுக்கு முன்னரான சிற்றுணவு மற்றும் பிரதான உணவு ஆகியவற்றை தயாரித்துக் கொள்வதற்கு போதியளவு சேர்மானங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த சமையல்கலை செயற்பாட்டுக்கான தீச்சுவாலையை லிட்ரோ வழங்கியிருந்தது. சிறந்த சமையல்கலை நிபுணர்களுக்கு சிறந்த எரிபொருள் அவசியமாகும்.

Team C அணியில் மிஸ் லக்சம்பேர்க், மிஸ் மலேசியா, மிஸ் நெதர்லாந்து மற்றும் மிஸ் பிலிப்பின்ஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இந்த அணி வெற்றியாளராக தெரிவாகியிருந்தது. இவர்களின் சுவை நிறைந்த ஸ்பைஸி சிக்கன் என்பது அதிகளவானோரின் தெரிவாக அமைந்திருந்ததுடன், பஸ்டா மற்றும் சலாட் வகைகளும் கவனத்தை ஈர்த்திருந்தன.

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், சீனா, டென்மார்க், இந்தியா, இத்தாலி, ஜப்பான், லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேசியா, நெதர்லாந்து, பிலிப்பின்ஸ், போலந்து, ரஷ்ய குடியரசு, சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், தாய்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் சமையல் செயற்பாட்டை மட்டும் முன்னெடுக்காமல், இந்த செயற்பாட்டை முன்னெடுக்கும் போது பாடல் மற்றும் ஆடல் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg