Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி விரதம் இன்று!

In ஆன்மீகம்
Updated: 06:33 GMT, Mar 7, 2016 | Published: 06:28 GMT, Mar 7, 2016 |
0 Comments
1230
This post was written by : Anojkiyan

சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி விரதம் இன்று (திங்கட்கிழமை) ஆலயங்களில் 04 யாம பூஜைகளும், விசேட வழிபாடுகளுடனும் இடம்பெறவுள்ளது.

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும்.

பிரலய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரி அனுஷ்டிக்க்படுவதாக இதிகாசங்கள் கூறுகின்றன.

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என கருதப்படுகின்றது. இப்படி 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடையாலம் என்றும் புராணங்கள் கூறுகின்றமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg