Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெஸ்ட் பொட்டேடோ

In
Updated: 11:27 GMT, Mar 8, 2016 | Published: 11:27 GMT, Mar 8, 2016 |
0 Comments
1234
This post was written by : Anojkiyan

உங்களுக்கு மாலை நேரத்தில் எதாவது சாப்பிட வேண்டுமென தோன்றினால் எளிதாக உருளைக்கிழங்கை வைத்து நெஸ்ட் பொட்டேடோ செய்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும்.

நெஸ்ட் பொட்டேடோ செய்வதற்கான எளிய செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 2 (தோல் உரித்து வேக வைத்தது)
சேமியா – 1/4 கப்
உப்பு – எண்ணெய் – தேவைக்கு
மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது)
மிளகாய் பேஸ்ட்- 1 டீஸ்பூன்
காலிஃப்ளவர் – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது

செய்முறை

வேக வைத்த உருளையை மசித்து கொள்ளவும். வெந்த கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டாணி, இஞ்சி, காலிஃப்ளவர், மிளகாய் பேஸ்ட், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். மசாலா ரெடி. பின்னர் மைதாவில் சிறிது நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை உருண்டையாக பிடித்து மைதா கரைசலில் முக்கி எடுத்து பின்னர் சேமியாவில் புரட்டி எடுத்து அதை குளிர் சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பிறகு அந்த உருண்டையை இரண்டாக வெட்டி கூடு மாதிரி செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வெள்ளை நிற ஜெம்ஸ் மிட்டாய் அல்லது சீரக மிட்டாயை அதனுள் போட்டு பரிமாறவும். பார்ப்பதற்கு பறவை கூட்டில் முட்டை இருப்பது போலவே இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg