Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஜ் ஸ்ப்ரிங் ரோல்

In
Updated: 11:17 GMT, Mar 10, 2016 | Published: 11:17 GMT, Mar 10, 2016 |
0 Comments
1299
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

மீதமான சப்பாத்தி – 4
நீளமாக நறுக்கிய கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் – 1 கப்
வேகவைத்த சைனீஸ் நூடுல்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – சிறிதளவு
சோயா சோஸ் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
சீனி – 1 டீஸ்பூன்
மைதா – 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர்

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் 1 சிட்டிகை சீனியை போடவும். உடனே நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து அதிக தீயில் வதக்கவும். பிறகு, நூடுல்ஸ் சேர்த்து, சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளற எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் மைதாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். சப்பாத்தியை எடுத்து நடுவில் இந்த காய் நூடுல்ஸ் ஸ்டஃபிங்கை உள்ளே வைத்து, மைதா பேஸ்ட்டால் ஓரங்களை மூடவும். 4 சப்பாத்திகளிலும் செய்து வைத்துள்ள கலவையை வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி தயார் செய்த சப்பாத்திகளை அடுக்கி, மூடி வைத்து வேக விடவும். இடையில் ஒருமுறை திருப்பி விடவும். தற்போது, வெஜ் ஸ்ப்ரிங் ரோல் தயார்..! சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும். நூடுல்ஸ் விரும்பினால் சேர்க்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg