Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் முதன்முறையாக Technomedics ஆரம்பித்துள்ள DREAMS Sleep Centre

In வணிகம்
Updated: 09:59 GMT, Mar 11, 2016 | Published: 09:59 GMT, Mar 11, 2016 |
0 Comments
1104
This post was written by : Anojkiyan

சுகாதாரப் பராமரிப்புத் தொழிற்துறையில் உடனடி தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமான Technomedics, இலங்கையில் முதன்முறையாக தூக்க தகவல் மையம் ஒன்றின் மீது முதலீடு செய்துள்ளது.

இல. 1083, பன்னிப்பிட்டிய வீதி, பத்தரமுல்லை என்ற முகவரியில் அமைந்துள்ள DREAMS Sleep Centre, கடந்த 25 ஆண்டுகளாக தூக்க தீர்வுகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகித்துவருகின்ற ResMed Australia (resmed.com) இன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் கூட்டிணைவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வைபவரீதியாக இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் நிதியமைச்சரான கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், பிரபலமான மார்பு சிகிச்சை வைத்திய நிபுணர்கள், காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், தூக்க தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் ஏனைய மருத்துவத்துறை சார் தொழில் வல்லுனர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தூக்கம் தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தூக்கத்திற்கான பயிற்சி, உரிய சிகிச்சை தொடர்பான வழிகாட்டல் மற்றும் கிடைக்கப்பெறுகின்ற சிகிச்சை வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவதை DREAMS Sleep Centre  தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படும் வியாதியைக் கண்டறிவதன் முதற்படியாக வீட்டில் எவ்வாறு தூங்குகின்றனர் என்பது தொடர்பான ஆய்வு கற்கையொன்றை இந்த மையம் முன்னெடுக்கும். மேலும் மருத்துவர்களின் பரிந்துரைக்காக தூக்க தரவு ஆராய்ச்சி மற்றும் தூக்க தரவு பகுப்பாய்வு மூலமாக அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த மையம் அணுசரணையளிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg