Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு வாரத்திற்கு பாண் விலை குறைப்பு

In வணிகம்
Updated: 08:57 GMT, Mar 14, 2016 | Published: 08:53 GMT, Mar 14, 2016 |
0 Comments
1241
This post was written by :

இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு பாணின் விலையை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 15ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது. எனவே, இன்று முதல் ஒருவாரத்திற்கு நுகர்வோர் வாரமாக பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வாரத்தில் நுகர்வோருக்கு விஷேட சலுகைகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இந்த பாண் விலை குறைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விலை குறைப்பு இந்த ஒரு வாரத்திற்கு மாத்திரே இருக்கும். அதன் பின்னர், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பாணின் விலை 2 ரூபாய் 50 சதம் முதல் 5 ரூபாவிற்கு இடையில் உயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடப்படும். இதற்கான தீர்மானத்தை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் எடுப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg