Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று!

In ஆன்மீகம்
Updated: 07:02 GMT, Mar 19, 2016 | Published: 07:01 GMT, Mar 19, 2016 |
0 Comments
1238
This post was written by : Anojkiyan

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான நிலையில், பங்குனித் திங்கள் 6ம் நாள் (19.03.2016) சனிக்கிழமையான இன்று, காலை 10.00 மணிமுதல் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் ஆரம்பமானது.

இந்த வைபவமானது, தொடர்ந்து திங்கட்கிழமை வரை நடைபெறும். இன்று காலை 7.00 மணிக்கு வேத பாராயணம், தருண கணபதி வழிபாடு, பஞ்சலிங்க பூஜை விசேட சந்தி, யாக பூஜை, நவாக்னி பூஜை, பாவன அபிஷேகம், பூர்ணாகுதி நடைபெற்றது.

கிரிகைள் யாவும் இணுவையூர் தர்ம சாஸ்தா குருகுல அதிபர், ‘வேதாகம ஞான பாஸ்கரன்’ சிவஸ்ரீ மகாதேவ சிவாச்சாரியார் அவர்களின் நல்லாசியுடன், மஹா கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குரு ‘வேதாகம உதய சூரியன்’, வேதாகம சக்கரவர்த்தி, பிரதிஷ்டா கலாசூரி, சிவாகம கலாநிதி சிவஸ்ரீ ஆதி. சௌந்தரராஜ குருக்கள் (தர்மசாஸ்தா குருகுலம் இணுவையூர், யாழ்நகர்) ஆவர்களின் தலைமையின் கீழ் கும்பாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெற்றுவருகின்றது.

ஆலய பிரதம குரு சுpவாகம கலாசிதி சிவஸ்ரீ நாராயண சபாரத்தினக் குருக்கள் (கீரிமலை நகுலேஸ்வர ஆதீனம்) ஆகியோரின் தலைமையயில் நடைபெற்றது.

pus

pus 1

pus 3

pus 2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg