Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரோஹரா என்றால் என்ன?

In ஆன்மீகம்
Updated: 10:27 GMT, Mar 22, 2016 | Published: 10:13 GMT, Mar 22, 2016 |
0 Comments
1287
This post was written by : Risha

ஆலயங்களில் வழிபாடுகளின் போது ‘அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என பக்தர்கள் ஒன்றுசேர கூறுவது வழமை. ஆனால் அதற்கு பொருள் எத்தனை பேர் அறிவார்கள்?

‘அர ஹரோ ஹரா’ என்ற சொற் பதத்தின் சுருக்கமே அரோஹரா அல்லது அரோகரா என தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக’ என்பதே பொருளாகும்.

இது எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை நோக்கினால், முன்னொரு காலத்தில் திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது பல்லக்கை சுமந்து வந்தவர்கள், தங்களது களைப்பை குறைப்பதற்காக ‘ஏலே லோ ஏலே லோ’ என்று பாடிக் கொண்டு வந்துள்ளனர்.

அதன்போது திருஞானசம்பந்தர், இவ்வாறு பொருள் அறியாமல் பாடுவதைவிட பொருள் அறிந்த ஒன்றை பாடுங்கள் என கூறி ‘அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளார். அதன் பின்னர் மக்கள் ‘அர ஹரோ ஹரா’ என்று சொல்வது வழக்கமாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg