Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமுடி உதிர்வது பிரச்சினையா? தவிர்க்க இதோ சில வழிமுறைகள்

In
Updated: 11:24 GMT, Mar 22, 2016 | Published: 11:24 GMT, Mar 22, 2016 |
0 Comments
1311
This post was written by : Risha

தேங்காய் எண்ணெய் மருத்துவம்

தலையில் தினமும் எண்ணெய் வைக்காமல் இருந்தால் முடியின் அடர்த்தி குறையும். எனவே, வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயுடன், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய் மருத்துவம்

முடியை பராமரிக்க உதவும் எண்ணெய்களில் விளக்கெண்ணெய் மிகவும் சிறப்பான ஒன்று. இது எப்படி அடர்த்தியான நிலையில் உள்ளதோ, அதேபோல் இதனைக் கொண்டு முடியைப் பராமரித்தாலும் முடியின் அடர்த்தி அதிகரிக்கும். அதற்கு வாரம் இருமுறை விளக்கெண்ணெயைக் கொண்டு நன்கு முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

வெந்தய மருத்துவம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வாரம் ஒருமுறை தலைக்கு தடவி ஊற வைத்து அலசி வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அடர்த்தியும் அதிகரிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg