Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவாமி விவேகானந்தர்!

In ஆன்மீகம்
Updated: 09:38 GMT, Mar 26, 2016 | Published: 09:33 GMT, Mar 26, 2016 |
0 Comments
1113
This post was written by : Anojkiyan

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 124ஆவது ஜனன தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 27ஆம் திகதியாகும்.

தமிழுக்கும் சைவத்திற்கும் அணிசேர்த்த இ.கி.மிசன் துறவியான வித்தகர் விபுலானந்த அடிகள் கிழக்கிலங்கையிலுள்ள காரைதீவில் 27.03.1892 இல் அவதரித்தார்.

அவரது 124 ஆவது ஜனன தினத்தையொட்டி இலங்கையிலும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலும் ஞாபகார்த்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பல பாகங்களிலும் சுவாமியின் 124ஆவது ஜனன தினத்தையொட்டிய நிகழ்வுகள் நடத்த அவர் சார்ந்த அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.

சுவாமிகள் பிறந்த காரைதீவு மண்ணில் காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தினர் நாளை அவர் பிறந்த மனையில் பெருவிழாவை நடத்தவுள்ளனர்.

பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தலுடன் சுவாமி பிறந்த வீட்டில் விசேட ஆராதனை வழிபாடு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதியாக விபுலானந்த மணி மண்டபத்தில் விசேட நினைவுதினக்கூட்டமும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg