Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியா மாநிலத்தில் ஒருமணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 08:32 GMT, Mar 29, 2016 | Published: 08:32 GMT, Mar 29, 2016 |
0 Comments
1198
This post was written by :

கலிபோர்னியா மாநிலத்தில் உடல் ரிதியாக உழைக்கும் தொழிலாளர்களின் ஒருமணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளமாக 15 டொலர்களை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முடிவின்மூலம், எதிர்வரும் 2023ஆம் ஆண்டிலிருந்து அங்கு பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளியும் தனது எட்டுமணி நேர குறைந்த பட்ச ஊதியமாக 90 டொலர்களை சம்பளமாக பெற முடியும் என்று நம்பப்படுகின்றது.

அமெரிக்காவில் நாடு முழுவதும் உடல் ரிதியாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஒருமணி நேரத்துக்கு ஏழரை டொலர்களாக உள்ளது. இதன்படி ஒருநாளில் எட்டு மணிநேரம் உழைத்தால் அதிகபட்சமாக ஒருவர் 60 டொலர்களை ஈட்ட முடியும் என்றநிலை இருந்து வருகின்றது.

எனினும் தற்பொழுதுள்ள சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 14 மாநிலங்களில் செயற்படும் பிரபல நிறுவனங்கள் மாத்திரம் தமது ஊழியர்களுக்கான சம்பளத்தை சற்று உயர்த்தி, ஒருமணி நேரத்துக்கு 10 முதல் 12 டொலர்கள்வரை செலுத்தி வருகின்றன.

இவ்வாறான ஒரு நிலையிலேயே ஒருமணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளமாக 15 டொலர்களை நிர்ணயிக்க வேண்டும் என்று கலிபோர்னியா மாநில ஆளுனர் ஜெர்ரி பிரவுன் தெரிவித்துள்ளார். எனவே அங்குள்ள அனைத்து நிறுவனங்களும் 2022ஆம் ஆண்டு இந்த புதிய சம்பள அதிகரிப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg