Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்ஸ் பிரியாணி

In
Updated: 04:03 GMT, Mar 30, 2016 | Published: 04:02 GMT, Mar 30, 2016 |
0 Comments
1322
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 250 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பாதாம், முந்திரி – தலா 50 கிராம்
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

அரைக்க

இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு, ஏலாக்காய் – தலா 2.

செய்முறை

அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க வைத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.

அரிசி வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். பின்னர் பரிமாறும் போது நட்ஸ்; சேர்த்து கொள்ளவும். தற்போது சுவையான நட்ஸ் பிரியாணி தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg