Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேழ்வரகு புட்டு

In
Updated: 07:30 GMT, Apr 4, 2016 | Published: 07:29 GMT, Apr 4, 2016 |
0 Comments
1283
icon_com
This post was written by : Shailu
puttu

தேவையான பொருட்கள் 

கேழ்வரகு மா – 3 கப்
உப்பு – 1ஃ2 டீஸ்பூன்
தேங்காய் – 1ஃ2 மூடி (துருவியது)
நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விடவும்.

இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சத்தான கேழ்வரகு புட்டு ரெடி!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg