Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளிக்கிழமை விரதம் என்றால் என்ன?

In ஆன்மீகம்
Updated: 08:17 GMT, Apr 4, 2016 | Published: 08:17 GMT, Apr 4, 2016 |
0 Comments
1283
icon_com
This post was written by : Shailu
shukran

சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியார். இவர்தான் நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகமும். இவர் தான் வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி. இந்த வெள்ளி என்ற சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு.

பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் இந்த சுக்கிரன். அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்றும் ஒரு பெயருண்டு.

ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் ஆகிறான். இந்த சுக்கிரனின் அதிதேவதை இந்திராணியாவாள். பிரத்யதி தேவதை இந்திரனாவான். எனவே இந்த சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள்.

எனவே பொன் மட்டுமல்ல வெள்ளி எனும் உலோகமும் மகாலட்சுமிக்குப் பிரியமான பொருளாகிறது. எனவே வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றுவதை மகான்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.

முன்பு ஒரு சமயம் சுக்கிரவாரமான வெள்ளிக்கிழமையில் இந்த சுக்கிரனே பராசக்தியை வழிபட்டு உயர்வு பெற்றான். அப்போது உலக மக்கள் என் ஆட்சியுள்ள வெள்ளிக்கிழமையில் சக்தி வழிபாடு செய்தால் அவர்களுக்கு நீ அளவற்ற சித்திகளை அள்ளித்தரவேண்டும் என்று வரத்தைப் பெற்றான். அதனால் சுக்கிர வார விரதம் என்ற வெள்ளிக்கிழமை விரதம் மகாலஷ்மி வழிபாட்டிற்கு உகந்ததாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg