Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவ பெருமைகள் கூறும் திருவாசகம்

In ஆன்மீகம்
Updated: 08:50 GMT, Apr 4, 2016 | Published: 08:31 GMT, Apr 4, 2016 |
0 Comments
1278
This post was written by : Shailu

பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசக சுவாமிகள். சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது அன்றோர் வாக்கு. நனி சொட்டும் பக்திச் சுவையும், மனதை உருகவைக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து பார்க்கப்படுகின்றன.

திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.திருவாசகமானது இறைவனாகிய சிவபெருமானை நாடி பெறவேண்டிய பேரியல்புகள் அவற்றை வளர்க்கும் முறைகள், அருளைப் பெறல், இறைவனைக் காணல், சிவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.

சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். ‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது வாக்கு. மாணிக்கவாசக சுவாமிகளுக்கு குருவடிவாகக் காட்சியளித்து தீட்சை தந்த சிவனை மீண்டும் பெற நினைந்து நினைந்து பாடியவை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg