Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோதுமை ரவை பொங்கல்

In
Published: 04:15 GMT, Apr 9, 2016 |
0 Comments
1454
icon_com
This post was written by :
கோதுமை ரவை பொங்கல்

தேவையான பொருட்கள்
சம்பா கோதுமைரவை – ½ கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
மிளகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரி – தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை – தேவைக்கு ஏற்ப

செய்யும் முறை
பாசிப்பருப்பு மற்றும் சம்பா கோதுமைரவை சேர்த்து நன்கு களைந்து குக்கரில் தண்ணீர் ஊற்றி தளர வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம், முந்திரி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். வெந்த ரவை, பாசிப்பருப்புடன் வறுத்த சாமான்களையும் உப்பு சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும். கோதுமைரவா பொங்கல் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg