Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகம் குளிர் நீர் குடிக்கிறீர்களா? : அவதானம்

In
Published: 04:37 GMT, Apr 9, 2016 |
0 Comments
1188
icon_com
This post was written by :
drinking-cold-water

தாகத்தைத் தணிப்பதற்கு பலர் குளிர்ச்சியான நீரையே குடிக்க விரும்புகின்றனர். தொடர்ந்து குளிர்ச்சியான நீரைப் பருகினால், உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்படும். அது பல நோய்களையும் ஏற்படுத்தும்.

குறிப்பான வெளியே வெயிலில் சுற்றித் திரிந்துவிட்டு அல்லது வெயிலில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்ததும், குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம். இது வெயிலில் இருந்து தற்காலிகமாக நல்ல நிவாரணத்தையும் சுகத்தையும் தரும்.

எனினும், குளிர் நீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.

நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 பாகை செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும். இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால், உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

குளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். இப்படி குளிர் நீரை தொடர்ந்து அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.

குளிர் நீரை அதிகம் குடிப்பதனால், உடலினுள் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே அதிகமாக குளிர் நீரை குடிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg