Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய முதலீடுகளுக்கு தயாராகும் இலங்கை

In வணிகம்
Updated: 06:18 GMT, Apr 9, 2016 | Published: 06:16 GMT, Apr 9, 2016 |
0 Comments
1174
icon_com
This post was written by :
Investing-in-SL

இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றத்தைக் காணும் முகமாக, நாட்டில் எதிர்வரும் காலங்களில் புதிய முதலீகளை ஈப்பதற்கான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

19ஆவது ஆசிய முதலீட்டு மாநாடு கடந்த 5ஆம் திகதி ஹொங் கொங்கில் ஆரம்பமாகியது. தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெற்ற இந்த மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது.

குறித்த மாநாட்டில் ஆசிய வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர்கள் மற்றும் நிதி துறை தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில், இலங்கை சார்பாக கலந்து கொண்ட நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அங்கு உரையாற்றும்பொழுதே இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒன்றரை வருடத்திற்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் மாற்றவிருக்கின்றோம். அதற்கான சில முக்கிய முன்நகர்வுகளை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க அங்கு தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg