Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீட்ரூட் சாதம்

In
Updated: 04:43 GMT, Apr 12, 2016 | Published: 04:42 GMT, Apr 12, 2016 |
0 Comments
1310
icon_com
This post was written by : Shailu
Beetroot rice

தேவையான பொருட்கள்

சாதம் – 1 கப்
பீட்ரூட் – ஒன்று
நெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – 3
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 2
உப்பு, கறிவேப்பிலை, முந்திரி, – தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அத்தோடு, பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

பின்பு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும். பின்னர் வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டை நன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும் போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதே அதில் சிறிது சிறிதாக சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். தற்போது சுவையான பீட்ரூட் சாதம் ரெடி தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg