Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்ரோனி சூப்

In
Updated: 05:20 GMT, Apr 18, 2016 | Published: 05:11 GMT, Apr 18, 2016 |
0 Comments
1176
icon_com
This post was written by : Shailu
macaroni soup

தேவையான பொருட்கள்

மெக்ரோனி – 2 டேபிள்ஸ்பூன்
வேக வைத்த சோள விதை – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள் – 1 டேபிள்ஸ்பூன் (அரிந்தது)
பட்டர் – 1 டீஸ்பூன்
உப்பு
சீனி – தேவையான அளவு
சோள மாவு – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
மிளகுத்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கெரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

மெக்ரோனியை தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பாலில் பட்டர் விட்டு சோள மாவை போட்டு குறைந்த தணலில் 2 நிமிடம் வறுக்கவும். தக்காளி, கெரட், வெங்காயத்தாளை நீர்விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடிகட்டி ஸ்டாக் தயாரித்துக் கொள்ளவும்.

பின்னர் வறுத்த சோள மாவில் ஸ்டாக் (காய்கறி வெந்த நீர்) சிறிது ஊற்றி பேஸ்ட் போலத் தயாரிக்கவும். வெந்த மெக்ரோனி, உப்பு, சீனி, சோள மாவு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் ஸ்டாக்குடன் சேர்த்து மீண்டும் சூடாக்கவும். வெந்த சோள விதையை தூவி சூடாகப் பரிமாறவும். தற்போது சுவையான மெக்ரோனி சூப் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg