Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

In வணிகம்
Published: 10:47 GMT, Apr 21, 2016 |
0 Comments
1139
icon_com
This post was written by :
Breakfast

உணவுப் பொருட்களின் விலையை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சிற்றுண்டிகளின் வட் வரி அதிகரிப்பு தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த மற்றும் சில்லறை பொருட்களுக்கான வட் வரி அதிகரிப்பிற்கு அமைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும்.

குறிப்பாக 5, 10 மற்றும் 15 ரூபாவால் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும். அதற்கமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg