Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏற்றுமதி செய்யப்படும் இறப்பர் மீதான செஸ் வரியைக் குறைக்க திட்டம்

In வணிகம்
Updated: 06:22 GMT, Apr 24, 2016 | Published: 06:22 GMT, Apr 24, 2016 |
0 Comments
1199
icon_com
This post was written by : Shailu
rubber

ஏற்றுமதி செய்யப்படும் இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைப்பதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

‘இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் இறப்பருக்கான செஸ் வரி 15 ரூபாவாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த செஸ் வரியை 5 வீதத்தால் குறைப்பதற்கு நிதி அமைச்சிடம் ஒன்றும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இறப்பர் விலை வீழ்ச்சியடைகின்ற போதிலும் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சந்தையில் காணப்படும் கேள்வியின் அடிப்படையில் இறப்பரின் விலை வீழ்ச்சியடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg