Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனியாருடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

In வணிகம்
Published: 14:01 GMT, Apr 26, 2016 |
0 Comments
1169
icon_com
This post was written by :
srilankan-airlines-011-720x480

இலங்கை விமானசேவை நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டுசெல்லும் பொருட்டு, தனியாருடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் சரத் அமுனுகம இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இதுகுறித்த இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமான சேவை நிறுவனம் பாரிய கடன் சுமையிலுள்ள நிலையில், அதன் நிர்வாகத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பில் இதற்கு முன்னரும் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும், கடன்தொகையுடன் அதனை பொறுப்பேற்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை.

இந்நிலையில், இலங்கை விமான சேவை நிறுவனம் செலுத்தவுள்ள தொகையை அரசாங்கம் பொறுப்பேற்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அதன் நிர்வாகத்தை தனியார் பொறுப்பேற்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg