Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதன்முறையாக சரிவை எதிர்நோக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய்

In வணிகம்
Updated: 07:13 GMT, Apr 27, 2016 | Published: 07:13 GMT, Apr 27, 2016 |
0 Comments
1150
icon_com
This post was written by : Risha
06_archimedes_35438535

கடந்த மார்ச் மாத காலாண்டில் ஐபோன்-களின் விற்பனை சரிவை எதிர்நோக்கி இருப்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் பாதிப்படைந்துள்ளதாக அந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதத்திற்கான காலாண்டில் மிகவும் குறைந்தளவிலான ஐபோன்களே விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாத காலாண்டு முடிவில் ஆப்பிள் நிறுவனமானது, 51.97 பில்லியன் டொலர் வருவாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த வருவாய் 50.56 பில்லியன் டொலராக சரிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய தயாரிப்புகளில் ஐபோன்-களின் விற்பனையே அதிகளவில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த காலாண்டில் ஐபோன்-களின் விற்பனை சரிவால் ஆப்பிள் வருவாய் பாதிப்படைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் முதன் முறையாக இவ்வாறு சரிவை எதிர்நோக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg