Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரியும் வாய்ப்பு

In வணிகம்
Updated: 10:07 GMT, Apr 27, 2016 | Published: 10:06 GMT, Apr 27, 2016 |
0 Comments
1238
This post was written by : Risha

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது வளத்தைப் பெருக்கிக் கொள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளது. அதேபோல ஈரானின் போட்டி நாடான சவுதி அரேபியாவும் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 44.37 டொலர் என்ற விலையில் வர்த்தகமானது. இது முந்தைய விலையை விடவும் 11 சென்ட் குறைவாகும்.

இது தொடர்பில் பிரித்தானிய பெட்ரோலிய நிறுவன தலைமை செயலர் பாப் டட்லி கூறுகையில், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து விநியோகம் குறையும்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தை சமநிலையை எட்டும். இத்தகைய சூழல் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படலாம் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg