Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மாம்பழ இறக்குமதி தடையை நீக்க விரைவில் நடவடிக்கை: கொரியா

In வணிகம்
Updated: 07:05 GMT, Apr 28, 2016 | Published: 07:04 GMT, Apr 28, 2016 |
0 Comments
1237
This post was written by : Risha

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு உள்ள தடையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கொரிய தூதர் சோ ஹூயன் தெரிவித்துள்ளார்.

விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (ஊநுPயு) மேம்படுத்தும் பேச்சுவார்த்தை கூட்டத்தின் போது இதற்கான தீர்வும் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தேசிய கனியாக திகழும் மாம்பழத்தின் இறக்குமதிக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன் சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு தீர்வு காண தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கான பாலமாக இருந்து வரும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து எதிர்வரும் ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg