Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டுக்கோழி ரசம்

In
Updated: 08:05 GMT, Apr 30, 2016 | Published: 08:05 GMT, Apr 30, 2016 |
0 Comments
1149
icon_com
This post was written by : Anojkiyan
na

தேவையான பொருட்கள் 

நாட்டுக்கோழி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பட்டை, லவங்கம் – தலா 1
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் தனியாத்தூள், பொடித்த மிளகு சீரகம், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.
இறக்கி வைத்து அதல் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். நாட்டுகோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் போலவும் குடிக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg