Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

In
Updated: 10:32 GMT, Jun 3, 2016 | Published: 10:31 GMT, Jun 3, 2016 |
0 Comments
1140
icon_com
This post was written by : Anojkiyan
chiken

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக்கிலோ
சின்னவெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
மிளகுதூள் – 4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 3 டீஸ்பூன்
தேங்காய்பால் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை

சிக்கனை பொடியாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிய பின்னர் அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேகவிடவும். அடுத்து அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். இதோடு வரமிளகாயை கிள்ளிப்போடவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். சிக்கன் ஊறவைத்ததால் வேகமாக வெந்துவிடும்.

சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும். ஸ்டவ்வை மிதமாக எரியவிடவும். சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்த உடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg