Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிலுள்ள 190,000 கார்களை திரும்பப்பெறும் வொக்ஸ்வோகன்

In வணிகம்
Updated: 15:40 GMT, Jun 5, 2016 | Published: 15:36 GMT, Jun 5, 2016 |
0 Comments
1282
icon_com
This post was written by :
volkswagen

ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனம், தமது தயாரிப்பில் வெளியாகி இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் கார்களை திரும்பபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

வொக்ஸ்வோகன் நிறுவனம் தனது கார்களில் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருள்களில் சில மாற்றங்களை செய்து, அதன் மூலம் குறைவான மாசு வெளியேறுவதை போல செய்திருந்தது. இதனால் அந்நிறுவனம் மாசுக்கட்டுப்பாடு ஊழலில் சிக்கியது.

அமெரிக்க கார் பரிசோதனை நிபுணர்களால் வொக்ஸ்வோகனின் இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில் அந்நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. பின்னர் அமெரிக்காவில் விற்பனை செய்த பல லட்சம் கார்களை திரும்ப பெற்று மென்பொருளில் திருத்தம் மேற்கொண்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் மேற்கொண்ட நடவடிக்கை போலவே இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் கார்களை திரும்ப பெற்று மென்பொருள் திருத்தம் செய்யப்போவதாக வொக்ஸ்வோகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg