Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் கொரிய மத்திய வங்கியின் கொள்கை வீதம் 1.25 சதவீதத்தால் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 15:19 GMT, Jun 9, 2016 | Published: 12:27 GMT, Jun 9, 2016 |
0 Comments
1173
icon_com
This post was written by : hoshika

தென் கொரிய மத்திய வங்கியின் கொள்கை வீதம் 1.25 சதவீதத்தால் இன்று (வியாழக்கிழமை) வீழ்ச்சி கண்டுள்ளதாக கொரிய மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொரிய மத்திய வங்கியின் ஆளுநர் Lee Ju-yeol  இன்று கருத்து வெளியிடுகையில், “இம்மாதம் நாட்டின் நாணயக் கொள்கை விகிதத்தை 25 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்த்துள்ளோம். மேலும், இதனால் விலையேற்றங்களும் கணிசமாக இருக்கும். உள்நாட்டு பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி வேகம் கணிப்பிட்டதை விட பலவீனமான இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, உலகப் பொருளாதாரமே வீழ்ச்சி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், தென் கொரிய பொருளாதாரமும் சிரிவை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் தென் கொரிய மத்திய வங்கியின் கொள்கை வீதம், தற்போதே அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவின் கப்பல் விற்பனை மற்றும் கப்பல் கட்டும் கைத்தொழில் ஆட்டம் கண்டுள்ள நிலையில், அத்துறைகள் சார்ந்து பல தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg