Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரு புதிய அடிப்படை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் Huawei நிறுவனம்!

In வணிகம்
Updated: 06:24 GMT, Jun 12, 2016 | Published: 11:44 GMT, Jun 11, 2016 |
0 Comments
1173
icon_com
This post was written by : Anojkiyan
huawei-logo-mwc-2015-1

Huawei நிறுவனம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த தகவல்களுக்கு அமைவாக, அந்நிறுவனம் இலங்கையில் இரு புதிய அடிப்படை ஸ்மார்ட்போன் வடிவங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. நாட்டில் அடிப்படை ஸ்மார்ட்போன் சந்தையானது மிகவும் போட்டித்திறன் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில், அதனை இலக்காகக் கொண்டு இச்சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Y தொடர் ஸ்மார்ட்போன் உற்பத்திகளின் கீழ் இச்சாதனங்கள் வெளிவரவுள்ளதுடன் இலங்கையில் கறுப்பு, பொன் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளது.

எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், மிகச் சிறந்த கெமரா அனுபவம், அதிக வேகம் கொண்ட இணைப்புத்திறன் மற்றும் நியாயமான விலை ஆகிய அனைத்து அம்சங்களையும் எதிர்பார்த்துள்ளவர்களுக்காகவே இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இரு ஸ்மார்ட்போன்களும் 1GB RAM மற்றும் 8GB உள்ளிணைக்கப்பட்ட சேமிப்பகம் மற்றும் அதிகரிக்கப்படக்கூடிய சேமிப்பக ஆதரவுடன் வெளிவரவுள்ளன.

நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம் இரு புதிய Huawei கையடக்க தொலைபேசி சாதனங்களும் 3G மற்றும் 4G ஆகிய இரு வடிவங்களில் வேறுபட்ட chipset தொழில்நுட்பங்களுடன் கிடைக்கப்பெறவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg