Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம் அட்டைகளை துண்டிக்க தவறிய மொபைல்போன் நிறுவனத்திற்கு அபராதம்

In வணிகம்
Updated: 11:10 GMT, Jun 12, 2016 | Published: 11:08 GMT, Jun 12, 2016 |
0 Comments
1211
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்க மொபைல்போன் நிறுவனமான எம்.ரி.என் நிறுவனம் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை துண்டிக்க தவறியமைக்காக நைஜீரிய அரசுக்கு 1.7 பில்லியன் டொலர் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு நைஜீரிய தகவல் தொடர்பு ஆணையத்தினால் 5.2 பில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் குறைந்தளவு அபராதத் தொகையே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சிய தொகை எதிர்வரும் மூன்று வருடங்களில் தவணை அடிப்படையில் வழங்கப்படும் என நைஜீரிய தகவல் தொடர்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

எம்.ரி.என் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புக்கள் மூலம் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் செயற்படலாம் என்ற அச்சத்தில் மத்தியில் இந்நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg