Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருச்சொரூப பவனி இன்று

In ஆன்மீகம்
Published: 12:13 GMT, Jun 13, 2016 |
0 Comments
1178
icon_com
This post was written by :
Kochchikade, St. Anthony Church

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 182 ஆவது வருடாந்த திருவிழா இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக நடைபெறுகின்றது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கடந்த 9 நாட்களாக நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றுகாலை கொழும்பு துணைஆயர் வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், இன்று காலை விசேட ஆராதனைகள் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.

இன்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருவிழா திருப்பலியில் புனித அந்தோனியாரின் ஆசி வேண்டி இன, மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 5.30 க்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளது.

இதனை தொடர்ந்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் புனித அந்தோனியாரின் ஆசிர்வாதம் வழங்கப்படவுள்ளதுடன் திருவிழா நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg