Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் தொடர்புண்டா?

In
Published: 11:41 GMT, Jun 16, 2016 |
0 Comments
1230
icon_com
This post was written by :
infosite-cholesterol-fb-800x420

கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பு இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கெட்ட கொழுப்பு அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கு உதவுவதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா, ஜப்பான், ஸ்வீடன், லண்டன், அயர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து கொழுப்புக்களுக்கும், இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வை நடத்தினர்.

இதில், கெட்ட கொழுப்புக்களுக்கும் இதய நோய்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது நீண்ட நாள் வாழ்வதற்கே உதவுகின்றன. இந்த கெட்ட கொழுப்புக்களும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும் போது தான் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது என தெரிய வந்துள்ளது.

மொத்தமாக நடத்தப்பட்ட 30 ஆய்வுகளில் 28 ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. பலரும் நினைப்பது போன்று கொழுப்புகள் உடலுக்கு கேடு விளைவிப்பது இல்லை. அதிகமான கொழுப்புக்களுக்கும் அனைத்து வகையான இதய நோய்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கெட்ட கொழுப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் ஆகியவற்றின் அளவு, வாழ்க்கை முறைகள், காலநிலைகள், பயன்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களிடமே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg