Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய வங்கி விசாரணை அறிக்கையை கோப் குழுவிடம் கையளிக்க தீர்மானம்

In வணிகம்
Updated: 07:07 GMT, Jun 21, 2016 | Published: 05:30 GMT, Jun 21, 2016 |
0 Comments
1190
icon_com
This post was written by : Shailu
Central Bank of Sri Lanka

இலங்கை மத்திய வங்கியின் முறிகள் தொடர்பான தனது விசாரணை அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான பல ஆவணங்களை மத்திய வங்கி வழங்கியுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேயசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த விசாரணைக்கான மேலும் பல ஆவணங்கள் மத்திய வங்கியின் அதிகாரிகளால் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் தொடர்பான கொடுக்கள் வாங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு கோப் என அழைக்கப்படும் பொது முயற்சியாண்மைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு  கணக்காய்வாளர் நாயகத்திற்கு பரிந்துரைத்திருந்தது.

அதற்கமைய, விசாரணைகளுக்கான ஆவணங்களை மத்திய வங்கியிடம் கணக்காய்வாளர் நாயகம் கோரியிருந்த போதிலும், அதனை வழங்குவதற்கு மத்திய வங்கி மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தேவையான ஆவணங்களை வழங்குமாறு கோப் குழு அறிவித்ததாக அந்த குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்துள்ளார்.

அதற்கமைய மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த 8 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு குறித்த ஆவணங்களை கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg