Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூகுள் சந்தைக்கு வெளியிடவுள்ள புதிய ஸ்மார்ட் போன்

In வணிகம்
Updated: 16:15 GMT, Jun 27, 2016 | Published: 15:43 GMT, Jun 27, 2016 |
0 Comments
1148
icon_com
This post was written by :
google-phone

கூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. குறித்த புதிய ஸ்மார்ட் போன் இந்த வருட இறுதியில் சந்தைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் கடந்த சில காலமாக ஸ்மார்ட் போன் உலகில் கவனம் செலுத்திவருகின்றது. அதன் வெற்றியாக பல வகையான நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், தற்போது நெக்ஸஸ் அல்லாத புதிய ஸ்மார்ட் போனை சந்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக புதிய ஸ்மார்ட் போனின் வடிவம், மென்பொருள் உள்ளிட்டவற்றில் கூகுள் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே, ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து நெக்ஸஸ் 6பி ஸ்மார்ட் போன், எல்.ஜீ நிறுவனத்துடன் இணைந்து நெக்ஸஸ் 5எக்ஸ், மொட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து நெக்ஸஸ் 6 மற்றும் HTC நிறுவனத்துடன் இணைந்து நெக்ஸஸ் 9 டெப்லட் ஆகியவற்றை சந்தைக்கு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg