Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசி பாயாசம்

In
Updated: 07:31 GMT, Jun 28, 2016 | Published: 07:31 GMT, Jun 28, 2016 |
0 Comments
1304
icon_com
This post was written by : Shailu
Arisi Paruppu Payasam

தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி – 200 கிராம்
பால் – 2 லிட்டர்
அரைத்த முந்திரிப் பருப்பு விழுது – 100 கிராம்
குங்குமப்பூ – 5 அல்லது 6 இழை
வெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கிராம்பு – 2
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
சீனி – 150 கிராம்

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் பாலை, குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலைத் தனியே எடுத்து வைக்கவும். இன்னொரு அடுப்பில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் அரிசியை வறுக்கவும். பின்னர் கொதித்துக் கொண்டிருக்கிற பாலில் போட்டுக் கிண்டவும்.

அரிசி உடைந்து வேக ஆரம்பிக்கும். அப்போது முந்திரி விழுது சேர்க்கவும். தனியே எடுத்து வைத்துள்ள ஒரு லிட்டர் பாலை, கால் லிட்டர், கால் லிட்டராக – 5 நிமிட இடைவெளி விட்டுச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். அத்தோடு, சீனி, கிராம்பு சேர்க்கவும்.

கலவை பஞ்சாமிர்தப் பதத்துக்கு வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை அதில் சேர்ந்து, மீதி 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெயில் தேங்காய் துருவலை பொன்னிறத்துக்கு வறுத்துச் சேர்க்கவும். தற்போது, சுவையான அரிசி பாயாசம் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg