Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெந்நீர்

In
Updated: 14:41 GMT, Jul 7, 2018 | Published: 11:57 GMT, Jul 5, 2018 |
0 Comments
1253
This post was written by : Risha
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. இது எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவுகிறது.

வெந்நீரை அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது ஒட்சிசனாகும். அது மனித உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வெந்நீர் குடித்தால் அது செரிமானத்தைத் தூண்டும்.

தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு சிறந்த மருந்து. அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதே மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்;. இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.

வெந்நீர் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும். எனவே, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)