Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கஜு கட்லி

In
Updated: 04:23 GMT, Oct 28, 2016 | Published: 04:21 GMT, Oct 28, 2016 |
0 Comments
1562
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

முந்திரி – 1 கப்
சீனி – 1 / 2 கப்
தண்ணீர் – 1 / 4 கப்

செய்முறை

முந்திரி பருப்பை வெறும் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சீனி, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

சீன பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசைய வேண்டும். அது சப்பாத்தி மாவு மாதிரி வரும்.

நெய் தடவிய தடிமனான தட்டில் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் வெட்ட வேண்டும். இப்போது தித்திப்பான கஜு கட்லி ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg