Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபிய கடற்பகுதியில் கரையொதுங்கிய குடியேறிகளின் சடலங்கள்

In
Updated: 04:23 GMT, Nov 11, 2016 | Published: 04:23 GMT, Nov 11, 2016 |
0 Comments
1108
This post was written by : hoshika

லிபிய தலைநகர் திருப்போலியின் மேற்கில் இருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அல்-மாயா நகரின் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், குடியேறிகள் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (வியாழக் கிழமை) கண்டெடுக்கப்படட இந்த சடலங்களை அடுத்து, இன்றும் (வெள்ளிக் கிழமை) உடற்பாகங்கள் கரையொதுங்கலாம் என மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 158,000 குடியேறிகள், மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு இத்தாலியை சென்றடைந்ததாக அண்மைய புள்ளவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில் ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாட்டால் பெரும்பாலான அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றமையால், ஆட்கடத்தல்காரர்களைக் கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை லிபிய கடலோரக் காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை கடற்பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg