Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘கறுப்புப் பணமே இந்தியாவைக் காப்பாற்றியது’: அகிலேஷின் சர்ச்சையான கருத்து

In இந்தியா
Updated: 05:17 GMT, Nov 16, 2016 | Published: 05:17 GMT, Nov 16, 2016 |
0 Comments
1280
This post was written by : Varothayan

சர்வதேசப் பொருளாதார நெருக்கடியால் பாதிப்படையாமல் இந்தியப் பொருளாதாரத்தை கறுப்புப் பணம் தான் காப்பாற்றியது என்ற சர்ச்சைக்குரிய கருத்தை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னௌ நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சியொன்றின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அகிலேஷ், கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன். அதனை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

எனினும், உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதன் தாக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையாமல் இருந்ததற்கு கறுப்புப் பணப் பொருளாதாரம் தான் கைகொடுத்ததாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 500, 1,000 ரூபாய் தாள்களை செல்லாததாக அறிவித்ததன் மூலம், ஏழை எளிய மக்களை மத்திய அரசு கடும் துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

பொதுமக்களைத் துன்புறுத்திய எந்தவொரு அரசையும் மக்கள் ஆட்சியில் விட்டு வைத்ததில்லை என்றார் அவர். முன்னதாக, ரூபாய் தாள்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்று அகிலேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg