Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்

In
Updated: 04:15 GMT, Nov 21, 2016 | Published: 04:14 GMT, Nov 21, 2016 |
0 Comments
1378
is-captures-syrian-pilot-after-shooting-down-plane

சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் எகிப்தின் சினாய் பகுதியில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

எகிப்தின் சினாய் தீப கற்ப பகுதியில் மத பிரமுகர்கள் இருவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்வது போன்ற காணொளி பதிவை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவானவர்களின் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

காணொளியில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் எல் அரிஷ் என்ற இடத்தில் தனது பண்ணையில் இருந்த போது கடத்திச் செல்லப்பட்ட சுபி ஷேக் சுலைமான் அபு ஹெராஸ் என்பவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட ஷேக் சேட் அப்துல் பட்டா என்பவருமே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

மத குருக்கள் இருவரை தாம் கொலை செய்துள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பினர் அறிக்கையிட்டுள்ள போதிலும் அவர்கள் இருவரும் மத குருக்கள் அல்ல மத பிரமுகர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.