Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் மாத பணவீக்கம் 0.5 சதவீத உயர்வு

In வணிகம்
Updated: 16:08 GMT, Nov 28, 2016 | Published: 06:06 GMT, Nov 28, 2016 |
0 Comments
1242
This post was written by : Shailu

வருட அடிப்படையில் 2016 ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கமானது 5 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதத்தில் 4.7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது பணவீக்கமானது, 0.3 சதவீத அதிகரிப்புடன் 5.0 சதவீதமாக உயர்வடைந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செப்டெம்பர் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒக்டோபர் மாதத்தில் 4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 செப்டெம்பர் மாத்தில் 113.5 சுட் டெண் புள்ளியிலிருந்து 2016 ஒக்டோபர் மாதத்தில் 114.7 புள்ளிக்கு அதிகரித்தது.

இம் மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகை சார்ந்துள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முககிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg