Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் தொடர்பில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த ஸ்கொட்லாந்து முயற்சி

In
Updated: 15:45 GMT, Nov 28, 2016 | Published: 08:40 GMT, Nov 28, 2016 |
0 Comments
1365
This post was written by : Sylviya

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, உயர் நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை ஒன்றை ஸ்கொட்லாந்து வெளியிட்டுள்ளது.

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என முன்னதாக பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இருப்பினும், குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக மே தெரிவித்ததை தொடர்ந்து, எதிர்வரும் மாதம் அவர் தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழியை பின்பற்றி ஸ்கொட்லாந்தும் பிரெக்சிற் தொடர்பான தனது தரப்பு நியாயங்களை முன்வைத்துள்ளது. அத்துடன், பிரெக்சிற் தொடர்பில் கிளெஸ்கோவும் வாக்களிப்பதற்கு உரிமை வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பட்சத்தில் தனிச் சந்தையில் ஸ்கொட்லாந்து பங்கேற்பது சாத்தியமற்றது என்பதாலேயே தற்போது இது தொடர்பில் ஸ்கொட்லாந்து மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றது.

பிரெக்சிற் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னதாக கருத்து தெரிவித்திருந்த மே, எதிர்வரும் ஆண்டு மாச்ர் மாதம் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அது 2019 ஆம் ஆண்டளவில் முழுமையாக செய்து முடிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் குறித்த செயற்பாடு தொடர்பில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் உரிமை ஸ்கொட்லாந்துக்கு இல்லை எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தினால், அது பிரதமர் மேயிற்கு சவாலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg