Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு அலெப்போவை மீளக் கைப்பற்றியது சிரிய அரசு

In உலகம்
Updated: 06:49 GMT, Nov 27, 2016 | Published: 06:49 GMT, Nov 27, 2016 |
0 Comments
1215
This post was written by : Sambavi

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய கோட்டையாக விளங்கும் அலெப்போவின் கிழக்குப் பகுதியை அரச படையினர் மீளக்கைப்பற்றியுள்ளனர்.

அலெப்போவில் மறைந்துள்ள தீவிரவாதிகளை இலக்கு வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு அலெப்போ மீது கடந்த நவம்பர் 15ஆம் திகதியில் இருந்து கடுமையான போர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அரச படைகள், அரச ஆதரவு படைகள், குர்திஸ் போராளிகள் என பல தரப்பினரும் இணைந்து அலெப்போவின் பல்வேறு பதிகளிலும் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக நான்கு திசைகளிலும் இருந்து தீவிரவாதிகளை நெருங்கிய படையினர் தற்போது அதன் பெறுபேறாக கிழக்கு அலெப்போவை தம்வசமாக்கியுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை அறிக்கையிட்டுள்ளது.

இதேவேளை, தீவிரவாதிகளுக்கு எதிரான குறித்த தாக்குதலில் இதுவரை சுமார் 212 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 27 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக தொடரும் போர்ச் சூழலில் இருந்து கிழக்கு அலெப்போவை மீட்டமை சிரிய அரசாங்கத்திற்கு பாரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்போது அரச தரப்பால் மீளக்கைப்பற்றப்பட்டுள்ள கிழக்கு அலெப்போவின் வடக்கு நகரான மசாகென் ஹனானோசை தீவிரவாதிள் கடந்த 2012ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg