Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவின் யுத்த பகுதிகளில் ஐந்து இலட்சம் சிறுவர்கள்: யுனிசெஃப்

In உலகம்
Updated: 10:16 GMT, Nov 27, 2016 | Published: 10:11 GMT, Nov 27, 2016 |
0 Comments
1255
This post was written by : Sambavi

ஐ.நா. சபையின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் அரை மில்லியனுக்கும் (சுமார் 5 இலட்சம்) சிறுவர்கள் வெளிநாட்டு அனுசரணையுடனான இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வாழ்கின்றார்கள் என்று தெரியவந்துள்ளது.

இத்தகைய ஆக்கிரமிப்புப் பகுதிகள் சிரியா முழுவதிலும் 16 காணப்படுவதாகவும் குறித்த பகுதிகளில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எதுவித நிவாரண உதவிகளோ அல்லது மனிதாபிமான உதவிகளோ கிடைக்காது துன்பத்தில் வாழ்வதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு அலெப்போவின் இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளில் மாத்திரமே சுமார் 1 இலட்சம் வரையான சிறுவர்கள் தங்கியுள்ளதாகவும் குறத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறான போதும், கடந்த வாரம் இராணுவத்தினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலின் காரணாக 8 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் இத் தாக்குதல் அலெப்போவின் பாடசாலை ஒன்றில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg